ராமநாதபுரம், மார்ச் 21: ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை உள்ளடக்கிய கீழக்கரை பகுதிகளில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் வேட்பாளராக போட்டியிடும் அப்துல் ஹமீது திங்கள்கிழமை தீவிர பிரசாரம் செய்தார்.ராமநாதபுரம் தொகுதியை சேர்ந்த கீழக்கரை, மாயாகுளம், நத்தம், மோர்குளம், காஞ்சிரங்குடி, கோரைக்கூட்டம் ஆகிய ஊர்களில் அவர் பிரசாரம் செய்தார்.பின்னர் புதுமடம் கிராம ஜமாத்தார்களையும், கிராம மக்களையும் சந்தித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார்.வேட்பாளருடன் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், துணைத் தலைவர் வழக்கறிஞர் கருணாகரன், பேரவைத் தொகுதிக்கான தலைவர் பைரோஸ்கான், தேர்தல் பணிக்குழு தலைவர் செய்யது ஹாலித் ஆகியோர் உள்பட அமைப்பின் நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.
0 comments:
Post a Comment