திருவாடானை:திருவாடானை தொகுதியை தங்கள் கட்சிக்கு ஒதுக்கசெய்யும் வகையில் வி.ஐ.பி.,க்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய கட்சிகளின் கூட்டணி முடிவாகாத நிலையில், திருவாடானை தொகுதியை சேர்ந்த வி.ஐ.பி.,க்கள் சென்னையில் முகாமிட்டு சீட் கேட்கும் முயற்சியில் உள்ளனர். திருவாடானை தொகுதி தற்போது காங்., வசம் உள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ., ராமசாமியின் சொந்த ஊரான கண்ணங்குடி ஒன்றியம், தொகுதி சீரமைப்பில் காரைக்குடி தொகுதியுடன் சேர்ந்து உள்ளதால்,இவர் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்ற பேச்சு அடிபடுகிறது.ஆனால் அவருடைய ஆதரவாளர்கள், திருவாடானை தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இத் தொகுதியை தி.மு.க.,விற்கு பெற்றுவிட அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில் அக் கட்சியினர் தீவிர முயற்சியில் உள்ளனர். இதுவரை நடந்த தேர்தலில் இத் தொகுதியில் ஒரு முறை மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இமமுறை அ.தி.மு.க. , விற்கு பெற்றுவிட மாவட்ட செயலாளர் ஆனிமுத்து மற்றும் அ.தி.மு.க.,வினர் தீவிர முயற்சியில் உள்ளனர். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ள த.மு.மு.க.,வின் மனித நேய மக்கள் கட்சி சார்பில் தொண்டியில் சில தினங்களுக்கு முன் ஊழியர் கூட்டம் நடந்தது. இதில் பேசிய தலைவர்கள் திருவாடானை தொகுதியை ம.ம.க.,விற்கு ஓதுக்க வலியுறுத்துவதாக பேசினர்.தே.மு.தி.க.,வும் இத்தொகுதியை குறிவைத்துள்ளது. இதற்காக இத் தொகுதியில் போட்டியிட விரும்பும் வி.ஐ.பி.,க்கள் இப்போதே சென்னையில் முகாமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர்.
செய்தி : தினமலர்
0 comments:
Post a Comment